Indigo Flight | கடைசி நேரத்தில் ரத்தான இண்டிகோ விமானம்... கண்ணீர் விட்டு அழுத பெண் பயணி...

x

இண்டிகோ விமானங்கள் ரத்து - கண்ணீர் விட்டு அழுத பெண் பயணி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சில இண்டிகோ விமானங்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டதால் பெண் பயணி ஒருவர் கண்ணீர்விட்டு அழுதார். அகமதாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, நாட்டின் பல்வேறு இடங்களில் இண்டிகோ விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து நடவடிக்கை தொடர்வதால், விமான நேர வரம்பு உத்தரவை, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்