

சிறு, குறு, நடுத்தர தொழிலகங்களை பாதிக்கும் சீன இறக்குமதிக்கு எதிரான பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கோரிக்கை பரிசீலிக்கப்படாதது முக்கிய காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. அதேப்போல உள்நாட்டு விவசாய உற்பத்தியாளர்களை பாதிக்கும் வகையில் ஓசேனியா நாடுகளின் வேளாண் பொருட்கள் இறக்குமதியாவதற்கு வழிவகுக்கும் என்பதாலும் இந்தியா இணைய மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் பால் உற்பத்தி துறையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அம்சமும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. R. C. E. P குழுவில் உள்ள பெரும்பான்மையான நாடுகளுடன் உள்ள வர்த்தக பற்றாக்குறை, சந்தை அணுகுதல் குறித்து நம்பகமான உத்திரவாதங்கள் இல்லாததும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.