இந்தியாவின் அடுத்த பாய்ச்சல்.. இறங்கும் 5th generation பைட்டர் ஜெட்

x

சமீபத்துல நடந்த ஆபரேஷன் சிந்தூர்ல எப்படி இந்திய இராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள தாக்குச்சு அதே மாதிரி பாகிஸ்தான் ல இருந்து வந்த ட்ரோன்கள எப்படி வான்பரப்புலயே சுட்டு வீழ்த்தி தவிடு பொடியாக்கிச்சுன்னு பல விஷயங்கள அறிவியல் பூர்வமா தெளிவா விளக்குனாங்க இந்திய இராணுவ அதிகாரிகள். குறிப்பா எதிரிகள் எந்த மாதிரியான தாக்குதல நடத்துனாலும் அதுக்கு சரியான பதிலடி கொடுக்க எல்லா வகையிலயும் தயாரா இருப்பதா தெரிவிச்சாங்க. இதுல கவனிக்கவேண்டிய விஷயம் என்னன்னா இதுலாம் விமானப்படையில தொழில்நுட்ப மேம்பாடு இல்லாம சாத்தியப்படாது. அப்படி வான் சக்திய கணிசமா மேம்படுத்தருதுக்காகவே பல திறன்கள கொண்ட ஆழமா ஊடுருவக்கூடிய போர் விமானத்தை உருவாக்கரத நோக்கமா கொண்டு தயாராக இருக்கு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள. அதுவும் உள்நாட்டு தயாரிப்பா உருவாக இருக்கர இந்த போர் விமானங்கள வடிவமைக்கரதுக்கான செயல்படுத்தல் மாதிரிக்கு ஒப்புதல் கொடுத்துருக்காரு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். சரி இப்ப இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கான தேவை என்ன? இதோட சிறப்புகள் என்னன்னு விரிவா பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்