கனமழை, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி : யாத்ரீகர்கள் 700 பேர் நேபாளத்தில் தவிப்பு

கனமழை காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கனமழை, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி : யாத்ரீகர்கள் 700 பேர் நேபாளத்தில் தவிப்பு
Published on

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்து 300 பக்தர்கள்

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்றிருந்தனர். யாத்திரை முடிந்து பக்தர்கள் திரும்பி வரும் நிலையில் கனமழை காரணமாக அவர்கள் பயணம் தடைப்பட்டுள்ளது. இதனால் மலையில் இருந்து கீழே இறங்கமுடியாமல் அவர்கள் குழுக்கள் குழுக்களாக பாதிவழியிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கனமழை, விமானசேவை பாதிப்பு, உள்ளிட்ட காரணங்களால் யாத்திரையை முடித்த 700 யாத்ரீகர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேபாளத்தில் இருக்கும் யாத்ரீகர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com