கடற்படையின் அடுத்த தளபதி யார்? - பெயரை அறிவித்தது மத்திய அரசு

கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, ஏப்ரல் 30 முதல், கடற்படையின் அடுத்த தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய கடற்படை தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com