இளம் வீரர்கள் தலைமையில் இந்திய அணி..கேப்டனாக சுப்மன் கில்
Shubman Gill | இளம் வீரர்கள் தலைமையில் இந்திய அணி..கேப்டனாக சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இங்கிலாந்து தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரேல், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேபோல், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் ஆகியோரும்அணியில் இடம்பெற்றுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கருண் நாயர் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
