விரைவு ரயிலில் கடவுள் சிவன் பட விவகாரம் : ரயில்வே துறை விளக்கம்

காஷி மஹாகால் விரைவு ரயிலில் கடவுள் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என ரயில்வேத்துறை விளக்கம் அளித்துள்ளது.
விரைவு ரயிலில் கடவுள் சிவன் பட விவகாரம் : ரயில்வே துறை விளக்கம்
Published on

காஷி மஹாகால் விரைவு ரயிலில் கடவுள் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என ரயில்வேத்துறை விளக்கம் அளித்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள புனித இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ள இந்த விரைவு ரயில் சேவையை வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் படுக்கை வசதி கடவுள் சிவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. வெள்ளோட்டத்தையொட்டி ரயில்வே ஊழியர்கள் சிலர் , கடவுள் சிவனின் புகைப்படங்களை பயணிகள் செல்லும் பெட்டியில் வைத்து பூஜை செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com