இசை நிகழ்ச்சி செய்து அசத்திய இந்திய கடல் படையினர்

இசை நிகழ்ச்சி செய்து அசத்திய இந்திய கடல் படையினர்
x

இசை நிகழ்ச்சி செய்து அசத்திய இந்திய கடல் படையினர்

கேரளாவில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையினர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். இந்திய நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டும், ஆப்பிரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படையினர் இசை நிகழ்ச்சி நிகழ்த்தினர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.

கைத்தறி புடவை பேஷன் ஷோ-பெண்கள் ஒய்யார நடை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கைத்தறி புடவைகள் மற்றும் ஆடைகளை ஊக்குவிக்கும் விதமாக, பேஷன் ஷோ நடைபெற்றது. இந்த நிகழ்வில் விதவிதமான கைத்தறி ஆடைகளை அணிந்து கொண்டு பெண்கள் ஒய்யார நடைபோட்டனர். இந்த நிகழ்ச்சியில் பல வகையான கைத்தறி ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பார்வையாளர்களிடம் அது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட கைத்தறி புடவை மாடல்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

ஊதா நிறத்தில் லாவெண்டர் பயிர்கள் - லாபம் ஈட்டும் விவசாயிகள்

போலந்தில் காலநிலை மாற்றம் காரணமாக லாவெண்டர் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. விவசாயிகளான அன்னா ஸ்க்வாரெக் மற்றும் ஸ்லாவோமிர் ஸ்டான்சுக் ஆகியோர் பாரம்பரிய பயிர்களை விட்டுவிட்டு லாவெண்டர் போன்ற வெப்பமான நிலத்திற்கு ஏற்ற பயிர்களைத் தேர்ந்தெடுத்து நடவு செய்துள்ளனர்.லாவெண்டர் குறைந்த நீர்ப்பாசனத்துடன் செழித்துவளர்கின்றன. இதன் மூலம் அழகு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்படுவதால், மக்களிடையே இதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இன்லைன் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற கொலம்பியா

சீனாவின் செங்டு சிட்டியில் நடைபெற்ற இன்லைன் ஸ்கேட்டிங் போட்டியில் கொலம்பியாவின் மாண்டிலா பினிலா மற்றும் ருவேடா ஆகியோர் தங்க பதக்கங்களை வென்றனர். இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங் ரோடு 15 ஆயிரம் மீட்டர் எலிமினேஷன் பந்தயங்களில் பினிலா, ஈக்வடாரைச் சேர்ந்த கார்சியா பாஸ்மினோவை பின்னுக்கு தள்ளி ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றார். பெண்கள் பிரிவில் பிரான்சின் மரைன் லெஃபியூவ்ரேவை, ரூடா வெற்றி பெற்றார்.




Next Story

மேலும் செய்திகள்