"கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை அறிவுரை

ஊரடங்கு தளர்வு மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது சவாலானது என்றும் கொரோனாவுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை அறிவுரை
Published on
கடந்த ஒன்றாம் தேதி முதல் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது சவாலானது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு வழிகாட்டு முறைகள் மிக மிக அவசியம், சமூக பழக்க வழக்க மாற்றத்தை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதற்கு மக்கள் ஆதரவு தேவைப்படுவதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com