"அதிகார குவிப்பு பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணம்" - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

பிரதமர் மற்றும் அவரது அலுவலகத்தில் உள்ள ஒரு சிறிய வட்டத்தில் உள்ளவர்கள் எடுக்கும் முடிவே, நாட்டின் பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
"அதிகார குவிப்பு பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணம்" - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை
Published on
பிரதமர் அலுவலகத்தில் அதிகாரம் குவிக்கப்பட்டதும், அதிகாரம் இல்லாத அமைச்சர்களும் தான், இந்திய பொருளாதாரம் தற்போது சந்தித்து வரும் நிலைக்கு காரணம் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராம் ராஜன் தெரிவித்துள்ளார். பொருளாதார மந்த நிலைக்கு தீர்வுக்காண, முதலில் மந்த நிலை உள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். முதலீடு, நிலம் மற்றும் தொழிலாளர் சந்தையில் சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார். தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா இணைவது மூலம், போட்டியை ஊக்குவிப்பதுடன், உள்நாட்டு திறனை அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள குறிப்பிட்ட சிறு குழுக்களிடம் இருந்து தான் அனைத்து யோசனைகள், திட்டங்கள் வருவதுடன், முடிவும் எடுக்கப்படுவதும் முக்கிய காரணம் என ரகுராம் ராஜன் குற்றம்சாட்டி உள்ளார். அனைத்து அதிகாரமும் மத்தியில் குவிக்கப்பட்டு வருவதும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு துறைகள் மிகப் பெரும் பிரச்சனையை எதிர்நோக்கி வருவதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் மற்றும் மக்களின் கடன் சுமை அதிகரித்து வருவது , நாட்டின் நிதித்துறையை ஆழ்ந்த சிக்கலில் ஆழ்த்தியுள்ளதாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்து வருவது, அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com