இந்திய பொருளாதார வீழ்ச்சி : "அரசாங்கமும் அதிகாரிகளும் பயம் கொள்ள வேண்டும்" - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கருத்து

இந்திய பொருளாதார வீழ்ச்சியை பற்றி அரசாங்கமும் அதிகாரிகளும் பயம் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
இந்திய பொருளாதார வீழ்ச்சி : "அரசாங்கமும் அதிகாரிகளும் பயம் கொள்ள வேண்டும்" - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கருத்து
Published on
இந்திய பொருளாதார வீழ்ச்சியை பற்றி அரசாங்கமும் அதிகாரிகளும் பயம் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஜிடிபி 23.9 சதவீதம் சுருங்கியுள்ள தகவல், அவர்களின் மெத்தனப் போக்கை கைவிடச் செய்யும் என்றார். கொரொனா பாதிப்பினால் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இரண்டு பெரிய வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இத்தாலியை விட இந்தியா மோசமான நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை சரி செய்ய, ஒரு பெரிய அளவிலான நேரடி செலவு திட்டத்தை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com