அமெரிக்காவில் கால் வைத்த இந்திய ராணுவம் - யாருமே எதிர்பாரா த்ரில்லான சம்பவம்
அமெரிக்காவில் நடைபெறும் 'யுத் அபியாஸ்' கூட்டு ராணுவ பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய ராணுவ குழு புறப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள Fort Wainwright-க்கு இந்திய ராணுவம் புறப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 14 வரை இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேரடி துப்பாக்கி பயிற்சிகள் முதல் உயரமான போர் சூழ்நிலைகளை எதிர்கொள்வது வரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பல கள சவால்களுக்கு தயாராக இருப்பது குறித்த பயிற்சிகளும் உள்ளடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
