புரட்டி போட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்ட இந்திய ராணுவம் - திக் திக் வீடியோ

x

கனமழை காரணமாக தெலங்கானாவின் வடக்கு பகுதிகள் கடுமையாக வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், பெத்தபள்ளி, காமரெட்டி மற்றும் மெடாக் மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று வான் வழியாக ஆய்வு செய்தார். முன்னதாக வெள்ள சேதம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காக காமரெட்டியில் ஹெலிகாப்டர் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக மெடாக் மாவட்டத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.

தெலங்கானாவின் ராஜண்ணா சிர்சில்லா (Rajanna Sircilla) மாவட்டத்தின் நர்மல் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி தவிதா மக்கள் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்