Indian Army | MohanLal | பெரும் கவுரவம்... மோகன்லாலுக்கு ராணுவ தளபதி பாராட்டு

x

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய ராணுவ தளபதி பாராட்டு அட்டை வழங்கி கவுரவித்துள்ளார். 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து நடிகர் மோகன்லாலை பலரும் வாழ்த்தி வருகின்றனர். கேரள அரசும் நடிகர் மோகன்லாலுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது. நடிகர் மோகன்லால், 2009ம் ஆண்டில் இருந்து, இந்தியாவின் பிராந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி, நடிகர் மோகன்லாலை அழைத்து , பாராட்டு அட்டை வழங்கி கவுரவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்