எல்லை மோதல்.. சீனாவின் திடீர் மாற்றம்.. விரையும் இந்தியா
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிறப்பு பிரதிநிதி பேச்சுவார்த்தைக்காக இன்று சீனா செல்ல உள்ளார். பெய்ஜிங்கில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், எல்லை பிரச்சினை குறித்து பேச உள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், இருநாட்டு உறவுகள் குறித்து மேம்படுத்துவதற்கு, இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இருநாடுகளுக்கு இடையே பெச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்து வந்தது. இருதரப்பு ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் இந்திய - சீனா எல்லையில், பாதுகாப்பு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
