India vs China|இந்திய எல்லைக்குள் நுழைந்ததா சீன ராணுவம்? - நாடு முழுக்க பூகம்பத்தை கிளப்பிய `நரவானே’
இந்திய எல்லைக்குள் நுழைந்ததா சீன ராணுவம்? - நாடு முழுக்க பூகம்பத்தை கிளப்பிய `நரவானே’ சீனா இந்திய எல்லைக்குள் தனது ராணுவத்துடன் நுழைந்ததாக முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறி, இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அந்த புத்தகம் இன்னும் வெளிவரவில்லை என்பதால் விவாதத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டன. இந்நிலையில், கடந்த 2023 டிசம்பர் 15-ம் தேதி நரவானே தனது சமூக வலைதளத்தில், தனது புத்தகத்தை வாங்கி படிக்குமாறு வெளியீட்டு பதிப்பகத்தின் இணைப்பதை பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது. புத்தகம் கிடைக்கிறது என முன்னாள் ராணுவ தளபதியே கூறியுள்ள நிலையில், அதில் உள்ள தகவல்களை நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கக் கூடாது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
