India vs China | ``சீனாவின் விஷமத்தனமான முயற்சி’’ - உச்சகட்ட கோபத்தோடு திருப்பி அடித்த இந்தியா
சீனாவுக்கு இந்தியா பதிலடி இந்தியப் பகுதிகளுக்குச் சீனா தன்னிச்சையாகப் பெயர்களைச் சூட்டுவது வெறும் கற்பனையான முயற்சி என்றும், இது அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற உண்மையை மாற்றாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாகத் திகழும் இடங்களுக்குப் புனைப்பெயர்களைச் சூட்டும் சீனாவின் விஷமத்தனமான முயற்சியை இந்தியா முற்றிலுமாக நிராகரிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீராக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்குச் சீனாவின் இத்தகைய செயல்பாடுகள் பின்னடைவை ஏற்படுத்துவதாகவும், இருதரப்பு உறவில் எதிர்மறையான சூழலை உருவாக்குவதைத் தவிர்த்து, சீனா கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
