தனியார் தொலைக்காட்சிகள் மூலம் இன்று முதல் ஆன்-லைன் கல்வி

தனியார் தொலைக்காட்சிகள் மூலம் இன்று முதல் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
தனியார் தொலைக்காட்சிகள் மூலம் இன்று முதல் ஆன்-லைன் கல்வி
Published on

தனியார் தொலைக்காட்சிகள் மூலம் இன்று முதல் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. வீட்டுக்கல்வி என்ற முறையில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்பு நடத்தக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்-லைன்

இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல், ஆன்-லைன் வகுப்பு தொடங்குகிறது. ஒரு செமஸ்டருக்கான பாட திட்டத்தை நிறைவு செய்ய குறைந்தது 90 வேலை நாட்கள் அல்லது 450 மணி நேர வகுப்பு நேரங்கள் தேவை. தற்போதுள்ள நிலையின்படி, 450 மணி நேர வகுப்புகள் என முடிவு செய்யப் பட்டுள்ளதாக, உயர் கல்வித் துறை அதிகாரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்று ரக்சா பந்தன் திருவிழா

இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ஒன்றான ரக்சா பந்தன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையே அல்லது பொதுவாக உடன்பிறப்புகளுக்கு இடையிலான அன்பையும் பிணைப்பையும் கொண்டாடும் நாளாக, இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது.

தங்க பத்திரம்

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி தங்க பத்திரம் திட்டத்தின் கீழ், இன்று முதல் முதலீடு செய்யலாம். ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம். ஒரு கிராம் 5 ஆயிரத்து 334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுத் தொகைக்கு 2 புள்ளி 5 சதவீத ஆண்டு வட்டி, 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வுத் தொகை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் முதலமைச்சரை சந்தித்து, இன்று ஆலோசனை நடத்துகின்றனர். மத்திய அ​ரசு ஒப்புதல் அளித்துள்ள தேசிய கல்வி கொள்கை பல்வேறு தரப்பிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென ஒரு குழு அமைத்து, அதன் பரிந்துரைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com