

இந்தியாவில் உள்ள மருத்துவ ஸ்கேன் மையங்களின் உரிமத்தை கொரோனா காலத்தில் புதுப்பிக்க தேவையில்லை என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு, தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கேரளாவை சேர்ந்த சாபு மேத்யூ என்பவர் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும், இது ஜூன் 30 ஆம் தேதிக்கும் மேல் நீட்டிக்கப்பட்டால், விவகாரத்தை நீதிமன்றத்தின் முன்பு மீண்டும் எழுப்ப மனுதாரருக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தனர். மேலும், மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.