"இந்தியா - பாக்.,போர் நிறுத்தம் - 3ம் தரப்பு தலையீடு இல்லை" - அமைச்சர் ராஜ்நாத்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் நடந்த 'ஹைதராபாத் விடுதலை தின' கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் இந்திய படைகளால் கொல்லப்பட்டதை அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டி, இதுதான் இந்திய ராணுவ வீரர்களின் வீரம் என புகழ்ந்தார்.
Next Story
