India |Mali | துப்பாக்கி முனையில் இந்தியர்கள் கடத்தல்.. மாலியில் பயங்கரவாதிகள் அட்டூழியம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... மாலியில் அல் கொய்தா, ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், கோப்ரி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் 5 இந்திய தொழிலாளர்களை கடத்திச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணியாற்றிய மற்ற இந்தியர்கள் தலைநகர் பமாகோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலையிலும் இதேபோல் 3 இந்தியர்கள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
