2036 Olympics| ஆட்டத்தில் இந்தியா அதிரடி என்ட்ரி.. மல்லுக்கட்டும் கத்தார், துருக்கி, கொரியா

ஆட்டத்தில் இந்தியா அதிரடி என்ட்ரி.. மல்லுக்கட்டும் கத்தார், துருக்கி, கொரியா

#2036olympics #olympics

2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வதற்கான கால அட்டவணையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ளது. 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு இந்தியா, ஜெர்மனி, ஹங்கேரி, கத்தார், தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய 7 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், வருகிற 31ம் தேதிக்குப் பிறகு, 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த புதிதாக எந்த நாடும் பரிசீலிக்கப்படாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.... வருகிற நவம்பர் மாதம் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்த நாடுகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் தங்கள் திட்டங்களை விளக்க உள்ளன. தொடர்ந்து 2027 மார்ச் மாதத்துக்குள் சாத்தியக்கூறுகள் மதிப்பீடுகள் செய்யப்பட்டு, போட்டியை நடத்துவதற்கான அடுத்தகட்ட ஆலோசனைகளை சர்வதேச ஒலிம்பிக் குழு தொடங்க உள்ளது 2028 டிசம்பரில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் விரிவான ஆலோசனை தொடங்கப்படும் என்றும், 2029ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில், 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. போட்டி நடைபெறும் இடங்களுக்கான திட்டம், வீரர்களுக்கான வசதிகள், நிதி ஏற்பாடுகள், அரசியல் சூழல், பொதுமக்களின் ஆதரவு, போட்டியை நடத்துவதற்கான திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு தேர்வு செய்யப்படும்....

X

Thanthi TV
www.thanthitv.com