"இலங்கையின் அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது" - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இலங்கையின் அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது" - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
Published on
இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஜனநாயக கோட்பாடுகள், அரசியலமைப்பு விதிகளுக்கு மதிப்பளிக்கப்படும் என நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com