Indian Economy| ``இந்தியா அசுர வேகத்துல வளருது’’ - வல்லரசுநாடுகளுக்கு ஷாக் கொடுத்த உலக வங்கி
#worldbank #indianeconomy #indianeconomicdevelopment
நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7.1 சதவீதமாக உலக வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னதாக 6.7 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், வலுவான உள்நாட்டுத் தேவை, உற்பத்தித் துறை மீட்சி மற்றும் சேவைத் துறையின் சிறப்பான செயல்பாடு காரணமாக தற்போது வளர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது மேலும், வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் காரணியாக இருக்கும் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா உலகின் அதிவேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாகத் தொடர்ந்து நீடிக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது
