India | Iran War | Petrol | Diesel | ஈரான் போர்..இந்தியாவில் எரிபொருள் இன்னும் எத்தனை நாள் தாங்கும்?
ஈரான் போரால் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. மேலும் உலக வர்த்தகத்தில் முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் 50 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் மொத்த தேவையில் 40% மட்டுமே ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கிடைக்கிறது என்றும், எஞ்சிய 60% இறக்குமதியில் எந்த தடையும் இல்லை என்பதால் நாட்டில் பெட்ரோல், டீசல், LPG தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
