"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்", மத்திய அரசிடம் கருத்து- ஓ.பி.ராவத் தகவல்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த தங்களது கருத்துக்களை, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரித்துள்ளார்.
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்", மத்திய அரசிடம் கருத்து- ஓ.பி.ராவத் தகவல்
Published on

இது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தற்போதைய சூழலில் 2019 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற தேர்தலையும் சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒன்றாக நடத்த தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பதில் சிரமம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், சில மாநில சட்ட மன்றங்களின் ஆயுட்காலத்தை குறைக்கும் நிலை உருவாகும் என்றும், இதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியிருக்கும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com