தாஜ்மஹாலில் வான் பாதுகாப்பு அமைப்பை நிறுவ இந்தியா முடிவு

x

தாஜ்மஹாலில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுவ முடிவு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில், ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவிலுள்ள முக்கிய பகுதிகளை குறிவைத்தது. இதனை இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முடியடித்தன. இந்நிலையில், தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிர்ப்பு சாதனங்கள் நிறுவப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்