

இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நேரில் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். தற்போது எல்லைப் பிரச்சினை கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் சமூக தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அண்டை நாடான நேபாளத்துடன் நல்ல உறவு நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.