``இந்தியாவில் ஆபத்தை நார்மலைஸ் செய்யும்..'' அதிர்வுகளை கிளப்பிய பிரையன் - விபரீதத்தை காட்டிய Podcast
இந்தியாவில் காற்று மாசுபாடு மிகவும் மோசமாக இருப்பதாக பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வரருமான பிரையன் ஜான்சன் (Bryan Johnson) வேதனை தெரிவித்துள்ளார்.
முதுமையிலிருந்து மீண்டும் இளமைக்கு திரும்ப முடியும் என்று தொடர்ந்து கூறி வரும் உலகின் பெரும் பணக்காரரான பிரையன் ஜான்சன் இந்தியாவில் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி போட்டுள்ள பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசமான காற்றின் தரம் காரணமாக இந்தியாவில் ஒரு பாட்காஸ்ட் ரெக்கார்டிங் நிகழ்ச்சியில் பாதியிலேயே விட்டு வெளியேற வேண்டியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நிலவும் கடுமையான காற்று மாசுபாடு பற்றி தனது கவலைகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், காற்று மாசுபாடு
ஏன் தேசிய அவசரநிலையாக கருதப்படவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வயது மூப்பு மற்றும் தேக ஆரோக்கியத்தில் காற்று மாசுபாட்டின் எதிர்மறையான தாக்கம் குறித்து பிரையன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஸெரோதா இணை நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்ததபோது கையோடு
ஏர் பியூரிபையரைக் கொண்டுவந்ததாகவும்,
ஆனால், வெளிக்காற்றின் தாக்கத்தால் அது பலனளிக்கவில்லை
என்றும் கவலையுடன் தெரிவித்துள்ளார். பாட்காஸ்ட் சூட்டிங் நடந்த ஃபைவ் ஸ்டார் ஓட்டலின் அறைக்குள் காற்றின் தரக்குறியீடு
130 ஆக இருந்ததால், 24 மணி நேரம் அதுபோன்ற அறைக்குள் இருப்பது சுமார் மூன்றரை சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காற்று மாசுபாடு இந்தியாவில் ரொம்பவே நார்மலாக ஆக்கப்பட்டிருப்பதாகவும், அதன் பாதிப்பு பற்றி தெரிந்தும் யாரும் அதனை கண்டுகொள்வதில்லை என்றும் கூறியுள்ள பிரயன் ஜான்சன், குழந்தைகள் சிறுவயது முதலே இதை எதிர்கொள்வதாகவும், இருப்பினும் ஒருவர் கூட மாஸ்க்
அணியாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கேன்சரை குணப்படுத்துவதை விட, காற்றின் தரத்தை சுத்தம் செய்வதன் மூலம் இந்தியா தனது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தட்டும் என்று கூறியுள்ள பிரையன் ஜான்சன்,
கேன்சரை விட காற்று மாசுபாடு தீவிரமான பிரச்சினை என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.