பெண்களுக்கு சுதந்திரம், முழு பாதுகாப்பு - பிரதமர் மோடி உறுதி

நாடு முழுவதும் பெண்களுக்கு சுதந்திரமும், முழு பாதுகாப்பும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு சுதந்திரம், முழு பாதுகாப்பு - பிரதமர் மோடி உறுதி
Published on
நாடு முழுவதும் பெண்களுக்கு சுதந்திரமும், முழு பாதுகாப்பும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற பாஜக தேசிய மகளிர் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், வருங்காலங்களில், பெண்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு கிடைக்கும் என உறுதி அளித்தார். முத்தலாக் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இதற்கு எழுந்த எதிர்ப்புகளை சுட்டிக்காட்டினார். இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக இருந்து, எதிர்ப்புகளையும், இடையூறுகளையும் சமாளித்து வெற்றி பெற்றதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார். பாஜகவின் தேசிய மகளிர் மாநாட்டில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com