அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும் - நாராயணசாமி

அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த புதுச்சேரி அரசு தீவிர கவனம் செலுத்துவதாக சுதந்திர தின உரையில் அம்மாநில முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும் - நாராயணசாமி
Published on
புதுச்சேரி மாநிலம் இந்திராகாந்தி மைதானத்தில், நடந்த விழாவில், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் நாராயணசாமி ஏற்றுக் கொண்டார். பின்னர், மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றி புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைபை வசதி செய்யப்பட்டுள்ளதாக பெருமிதமாக தெரிவித்தார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்பு வகுப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்றார். இதையடுத்து, அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
X

Thanthi TV
www.thanthitv.com