Wife``ரூ.4 லட்சத்தை ரூ.16 லட்சமாக உயர்த்தி கொடுங்க’’ - மறுமணம் செய்த பெண்ணுக்கு ஆதரவாக கோர்ட் அதிரடி

Wife``ரூ.4 லட்சத்தை ரூ.16 லட்சமாக உயர்த்தி கொடுங்க’’ - மறுமணம் செய்த பெண்ணுக்கு ஆதரவாக கோர்ட் அதிரடி

"மறுமணம் செய்து கொண்டதால் பெண்ணிற்கு இழப்பீடு மறுப்பதா?" கார் விபத்தில் கணவரை இழந்த பெண்ணுக்கு காப்பீட்டு நிறுவனம் மறுமணம் செய்ததைக் காரணமாக கூறி இழப்பீடு மறுத்த வழக்கில், கேரளா உயர் நீதிமன்றம் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கில் மறுமணம் சார்புரிமையை நீக்காது என்று தெளிவுபடுத்திய நீதிமன்றம், மனைவியாக இருந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்பை மறுமணம் போன்ற பிற்கால நிகழ்வுகள் நீக்கிவிடாது என்றும் கூறியுள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இழப்பீடு தொகையாக முன்னர் அறிவிக்கப்பட்ட நான்கு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை, 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com