வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Published on
வருமான வரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய கடைசி தேதி, ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 கோடியே 10 லட்சம் பேர் ஆன்லைனில் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டில் ஒரு கோடியே 70 லட்சம் பேர் மட்டுமே தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களில் 60 சதவீதம் பேரின் கணக்கு சரிபார்க்கப்பட்டு 65 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு 'ரீபண்ட்' தொகை அனுப்பபட்டுள்ளது. இதுவரை 77 ஆயிரத்து 672 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது 57 ஆயிரத்து 551 கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் 'ரீ பண்ட்' தொகை 385 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல, கடந்த ஆண்டில் 10 கோடியே 60 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை, 11 கோடியே 25 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது. வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு நல்ல பலனை தந்துள்ளதாக கருதப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com