வருமான வரி தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு இல்லை - வருமான வரித்துறை விளக்கம்

வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.
வருமான வரி தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு இல்லை - வருமான வரித்துறை விளக்கம்
Published on
வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் , நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவியது. இதை மறுத்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகள் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி, அதாவது நாளைக்குள் வரித்தாக்கல் செய்ய நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் மாற்றமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com