வருமான வரி கணக்கு தாக்கலில் உலக சாதனை, ஒரே நாளில் 49.25 லட்சம் பேர் கணக்கு தாக்கல்

நாடு முழுவதும் இணைய தளம் மூலமாக ஒரே நாளில் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து உலக சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி கணக்கு தாக்கலில் உலக சாதனை, ஒரே நாளில் 49.25 லட்சம் பேர் கணக்கு தாக்கல்
Published on

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நேற்று முன் தினம் இறுதி நாள் என்ற நிலையில், நாடு முழுவதும் இணைய தளம் மூலமாக ஒரே நாளில் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 பேர் கணக்கு தாக்கல் செய்து உலக சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாயிரத்து 205 தடவை இணையதளத்தை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறியடி​க்கப்பட்டு உள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக வினாடிக்கு 196 கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இமெயில், தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாக கேட்ட சந்தேகங்களுக்கு உடனுக்கு உடன் விளக்கம் அளிக்கப்பட்டதும் இந்த சாதனைக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com