புதிய கல்லூரி திறப்பு விழா - எம்.எல்.ஏ ஜெகன்மூர்த்தி பங்கேற்பு
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் அரசு கல்லூரி திறப்பு விழாவில், அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியின் இடையே, தொகுதி எம்.எல்.ஏவும், புரட்சி பாரதம் கட்சித் தலைவருமான ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அரசு கலைக் கல்லூரியை திறந்து வைத்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, ஜெகன்மூர்த்தியை பேச அழைத்தார். அப்போது, அமைச்சர் பேசிய பின், தன்னை பேச அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய ஜெகன்மூர்த்தி, தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கலைக்கல்லூரி அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
Next Story
