உத்தரப்பிரதேசத்தில், காதலி தன்னுடன் பேச மறுத்ததால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹாப்பூரில் உள்ள பென்னா என்ற கிராமத்தில், மணிஷ் என்ற இளைஞர், ஆப்போர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், காதலி பேச மறுத்ததால் விரக்தி அடைந்த இளைஞர், நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறியுள்ளார். அங்கு பொதுமக்கள் குவிந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,
பெண்ணை தொடர்பு கொண்டு, இளைஞருடன் தொலைபேசியில் பேச வைத்தனர். இதனால் சமாதானம் அடைந்த இளைஞர், பின்னர் கீழே இறங்கி வந்தார்.
Next Story
