மனதின் குரலில் பிரதமர் வைத்த மிகப்பெரிய குற்றச்சாட்டு

x

அவசர நிலையை அமல்படுத்தியவர்கள் நமது அரசியலமைப்பை மட்டுமின்றி, நீதித்துறையையும் தங்கள் அடிமையாக வைத்திருக்கும் நோக்கத்தை கொண்டிருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இம்முறை ஒரே பூமி மற்றும் ஒரே ஆரோக்கியத்திற்காக யோகா என்ற கருப்பொருளில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டார். உலக சுகாதார அமைப்பு, இந்தியாவை, கண் தொற்றுநோய் எனப்படும் டிராக்கோமா Trachoma இல்லாத நாடாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார். எமர்ஜென்சியை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய அனைவரையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், இது நமது அரசியலமைப்பை வலுவாக வைத்திருக்கவும், தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும், நம்மை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்