இரவோடு இரவில் பெட்ரோல் ஊற்றி காருக்கு தீ வைத்துவிட்டு ஓடிய நபர் - அதிர்ச்சி காட்சி
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், தெங்கனூர் ரயில்வே நிலையம் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை தீயிட்டு கொளுத்திய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது. கவிதா என்பவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story