சென்னையில் இந்த இடங்களில் 17 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் - குண்டூர் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கவரப்பேட்டை - கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இன்றும், 7 ஆம் தேதியும் மொத்தம் 17 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் மாறாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Next Story
