பீகாரில் கர்ப்பிணி பெண் வேடமிட்டு புர்காவுக்குள் மதுபானம் கடத்தல்.

x

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில், வயிற்றில் மதுபானங்களை செல்லோ டேப் ஒட்டியவாறு கர்ப்பிணி பெண் போல் புர்கா அணிந்தபடி கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டிஹார் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய புர்கா அணிந்த பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தபோது, இந்தக் கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, இஸ்லாமிய பெண் வேடமிட்டு மதுபானங்களை கடத்திய சந்தியா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்