மொபைலுக்கு வரும் முக்கிய SMS - வெளியான எச்சரிக்கை
புதுச்சேரியில் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பிரபல வங்கிகளின் பெயரில், வாட்ஸ் ஆப்பில் வரும் போலி லிங்குடன் கூடிய குறுஞ்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அது இணைய வழி குற்றவாளிகள், பொதுமக்களிடமிருந்து பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் குறுஞ்செய்தி என்று அறிவுறுத்திய அவர்கள்,
இணைய வழி சம்மந்தமான புகார் மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story