காதலித்து திருமணம் செய்த நிலையில் கள்ளத் தொடர்பை கைவிட மறுத்த மனைவி - நான்கரை வயது குழந்தையுடன் கணவன் தற்கொலை

காதலித்து திருமணம் செய்த மனைவி கள்ளக்காதலை கைவிட மறுத்து மிரட்டியதால் மனமுடைந்த கணவன், நான்கரை வயது குழந்தையை ​கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலித்து திருமணம் செய்த நிலையில் கள்ளத் தொடர்பை கைவிட மறுத்த மனைவி - நான்கரை வயது குழந்தையுடன் கணவன் தற்கொலை
Published on
ஆந்திர மாநிலம் சித்தூர் நகரம் பிரசாந்த் நகரை சேர்ந்த கணேஷ், 6 ஆண்டுக்கு முன்பு சென்னையில் பணிபுரிந்த போது, திவ்யாவை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கரை வயதில் மகள் உள்ள நிலையில், திவ்யா கடந்த சில ஆண்டுகளாக வினோத், தனா உள்ளிட்ட பலருடன் முறையற்ற உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கணேஷ், குழந்தையை கொன்று விட்டு தானும் தறகொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திவ்யா, வினோத், தனா, சோபியா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
X

Thanthi TV
www.thanthitv.com