காங்., ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்படும்" கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

x

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார். பெங்களுரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல ஊர்களில் 200 முதல் 300 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை ஆர்.எஸ்.எஸ் கட்டுவதாகவும், அதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வருகிறது ? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், அமலாக்கத்துறையோ அல்லது வருமான வரித்துறையோ இதையெல்லாம் ஆய்வு செய்வதில்லை என்றும், எதிர்கட்சிகளை மட்டுமே குறிவைத்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்