``இனி கல்லூரி மாணவர்கள் இப்படி செய்தால் உதவித்தொகை, இலவச சலுகை பறிக்கப்படும்’’
ராகிங் - கடும் நடவடிக்கைக்கு யூஜிசி அறிவுறுத்தல்
ராகிங் எதிர்ப்பு இணையதளத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் கேலிவதை எதிர்ப்பு குறித்த பல்கலைக்கழ மானியக் குழுவின் ஆலோசனைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதிசெய்து ராகிங் எதிர்ப்பு இணையதளத்தில் தகவலைப் பதிவேற்றுமாறு தெரிவித்துள்ளது.
ராகிங்கில் ஈடுபடுவர்களின் உதவித்தொகை மற்றும் பிற சலுகைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், இத்தகைய நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் அடிகோடிட்டு காட்ட வேண்டும் என கூறியுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய கல்விச் சூழலை உறுதி செய்வதற்காக ராகிங்கில் ஈடுபடுவர்களின் சேர்க்கையை ரத்து செய்வது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
கல்லூரியிலிருந்து ஒரு மாதம் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் விடுதியிலிருந்து இடைநீக்கம் அல்லது வெளியேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
