ICL Fincorp நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய கடன் பத்திர திட்டம்
ICL Fincorp நிறுவனம், தனது புதிய கடன் பத்திரங்கள் வெளியீடு குறித்து அறிவித்துள்ளது. திரும்ப பெறக்கூடியதாகவும், மாற்ற முடியாத வகையிலும், பாதுகாப்பான கடன் பத்திரங்களை வழங்கும் இந்த திட்டம், வரும் 17ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம், அதிகபட்சம் 12 புள்ளி 62 சதவிகிதம் வரை பயனுள்ள வருவாய் கிடைக்கும் எனவும், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் கொண்ட முதலீட்டு வாய்ப்பாக திகழும் எனவும் ICL Fincorp நிறுவனம் தெரிவித்துள்ளது. தமது முந்தைய NCD திட்டங்களுக்கு முதலீட்டாளர்கள் வழங்கிய ஆதரவும், வரவேற்பும் தங்களுக்கு பெரும் ஊக்கமாக இருந்ததாக கூறியுள்ள ICL Fincorp நிறுவனம், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மேலும் பல புதுமையான நிதி திட்டங்களை கொண்டுவர தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
Next Story
