ஹைதராபாத்திலும் துப்பாக்கிச்சூடு - கர்நாடக கொள்ளையர்களால் பதற்றம்
கர்நாடகாவில் வங்கி ஊழியரை கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள், ஹைதராபாத்திலும் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பீதாரில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஹைதராபாத் சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல முயன்றுள்ளனர். அப்போது டிராவல் ஏஜென்சி ஊழியர் ஒருவர் கொள்ளையர்களை அடையாளம் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயன்றுள்ளார். அவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். கர்நாடகா - ஹைதராபாத் எல்லை பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.
Next Story
