கணவன் கொடுமை - மாடியிலிருந்து கீழே குதித்த இளம்பெண்

x

கணவன் கொடுமை - மாடியிலிருந்து கீழே குதித்த இளம்பெண்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவனின் கொடுமையால், மாடியிலிருந்து கீழே குதித்து மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அலிகாரில் உள்ள டான்கோலி கிராமத்தில், கணவன் அடித்துக் கொடுமைப்படுத்தியதால் விரக்தி அடைந்த அர்ச்சனா என்கிற பெண், வீட்டின் மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தார்குழந்தைகள் கண்முன்னரே அவர் குதித்ததை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்