காதல் மனைவியை கொலை செய்த கணவன்.. பாட்டுக்கு பாட்டு போட்டியில் உருவான தகராறு...
- காதல் மனைவியை கொலை செய்த கணவன்...
- பாட்டுக்கு பாட்டு போட்டியில் உருவான தகராறு...
- கணவரின் குடும்பத்தை கேலி செய்ததால் ஆத்திரம்...
- மனைவி கழுத்தில் கத்தியை இறக்கிய கணவன்...
- மெட்டுப்போட்ட மனைவி... கொன்றுபோட்ட கணவன்...
- உடலை சூட்கேஸில் மறைத்துவிட்டு தப்பியோட்டம்...
- வார்த்தைகளால விவரிக்க முடியாத கடினமான உணர்வுகள கூட பாடல்கள் மூலமா ஈஸியா Convey பண்ண முடியும் என்றத இது மாதிரி பல திரைப்படங்கள்ல நாம பார்த்திருப்போம்...
- எல்லா பாட்டுக்கும் ஏழு ஸ்வரம் தான்.. ஏழு தாளம் தான்னு வச்சிக்கிட்டாலும், ஒவ்வொரு பாட்டுமே மனசுக்குள்ள ஏற்படுத்தக்கூடிய Impact எல்லாருக்கும் ஒரே மாதிரியா இருக்காது...
- ஒரு சிட்சுவேஷனுக்காக கம்போஸ் செய்யப்பட்ட டியூனும், வரிகளும் சிலருக்கு சந்தோசத்த தரும்... சிலருக்கு அதே பாட்டு கொடூரமான நினைவுகளாவும் மாறும்.
- அப்படி தான் இப்ப நாம பார்க்க போற இந்த கதைலயும் கணவன் மனைவி ரெண்டு பேர் பாட்டுக்கு பாட்டு போட்டு உணர்வுகளோட விளையாடி இருக்காங்க... அதுல மனைவி போட்ட ஒரு மெட்டு கணவனுக்குள்ள கொலைவெறிய தூண்டி இப்ப அவரோட லைஃப் பார்ட்னர்யே கொன்னு போட வெச்சிருக்கு...
- ஒரு மியூசின் எப்படி ? ஒரு மனுஷன கொலைக்காரனா மாற்றுச்சுனு தெரிஞ்சிக்க விசாரணைய தொடங்கினோம்.
- மனைவிய கொலை செஞ்சி அவரோட Deathbody-ய சூட்கேஸ்ல பேக் அப் பண்ண இந்த கணவரோட பேரு Rakesh Khedekar.
- பெங்களூர்ல உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்துல சீனியர் புரோஜெக்ட் மேனேஜர்ர வேலை பார்த்து வந்திருக்காரு....
- கொலை செய்யப்பட்ட மனைவியோட பேரு Gauri Sambrekar...
- ரெண்டு பேரும் School Friends... ராகேஷுக்கு Gauri மேல எக்கச்சக்கமான லவ் இருந்திருக்கு... அதன்காரணமா, ரெண்டு பேரும் பெற்றோர்கள் சம்மதத்தோட மேரேஜ் பண்ணி இருக்காங்க...
- ஆனா, திருமணமான முதல் நாள்ல இருந்தே கெளரிக்கு மாமியோரோடவும், நாத்தனாரோடவும் சுத்தமா செட் ஆகல...
- கணவர்ர குடும்பத்துல இருந்து பிரிச்சு பெங்களூருக்கு தனிக்குடித்தனம் அழைச்சிட்டு வந்திருக்காங்க கெளரி.
- வொர்க் ஃபிரம் ஹோம் Mode-ல வேலைப்பார்த்து வந்த ராஜேஷுக்கு தினமும் டூட்டி முடிஞ்சதும் மது அருந்தக்கூடிய பழக்கம் இருந்திருக்கு.
- சம்பவம் நடந்த மார்ச் 26 ம் தேதி சாயந்திரம் கணவன், மனைவி ஷாப்பிங் போய் மது பாட்டில் Purchase பண்ணிட்டு வீட்டுக்கு திரும்பி இருக்காங்க... ராகேஷ் சந்தோசமா peg போட அவரோட மனைவி கெளரி கணவருக்காக கிச்சன்ல ஷைடிஷ் Prepare பண்ணி இருக்காங்க...
- இந்த கதைய இதுவரைக்கும் கேட்குற மாடர்ன் மைன்ட் செட்ல உள்ளவங்களுக்கு சில்லுனு ஒரு காதல் கெளதம், குந்தவி மாதிரி சந்தோசமா வாழ்ந்திருக்காங்கன்னு தான் நினைக்க தோணும். அவ்வளவு ஏன் ? ராகேஷ் தான் Happiest Man in the world-னு கூட நினைச்சு இருப்பாங்க. But, அவருக்குள்ளயும் ஒரு Dark shade இருந்திருக்கு. கெளரி ஒருநாள் கணவரோட சிரிச்சு சந்தோசமா இருந்தாங்கன்னா ? மறுநாளே அவர்ர வெறுத்திருக்காங்க... அதுக்கு காரணம் மாமியார்கிட்ட இருந்து மகன்ன பிரிச்சு கூட்டிட்டு வந்த பிறகும் ராகேஷ் அவரோட ஃபேமிலியோட Bonding-ஆ இருந்தது தான்.
- சம்பவம் நடந்த அன்னைக்கு டின்னர் சமைச்சு முடிச்சதும் கணவரோட சேர்ந்து பாட்டுக்கு பாட்டு Game ஆடி இருக்காங்க கெளரி...
- கணவர் ஒரு பாட்டு ப்ளே பண்ண அதுக்கு பதிலளிக்கிற மாதிரி மனைவி இன்னொரு எசப்பாட்டு ப்ளே பண்ணனும் இவ்ளோ தான் அந்த கேம்மோட ரூல்ஸ்...
- ரெண்டு பேரும் தொலைக்காட்சி Debate Show மாதிரி மாறி மாறி பாட்டுலயே பஞ்சாயத்த கூட்டி இருக்காங்க. அப்போ கெளரி ராஜேஷோட குடும்பத்த கிண்டல் பண்ற மாதிரியான ஒரு மராத்தி சாங் ப்ளே பண்ணி இருக்காங்க.
- மது போதைல இருந்த ராகேஷ் அத கேட்டதும் டென்ஷன் ஆகி இருக்காரு, கெளரிகிட்ட “ப்ளிஸ் Stop This Nonsense–ன்னு எடுத்து சொல்லி இருக்காரு.
- ஆனா, கெளரி விடுறதா இல்ல உன்னோட குடும்பத்த குத்திக்காட்டினதும் கோபம் கொப்பளிச்சுகிட்டு வருதோன்னு ராகேஷ்கிட்ட வம்பிழுத்திருக்காங்க. இதனால சந்தோசமா தொடங்கின டின்னர் டிஸ்கஸன் தகராற மாறி இருக்கு...
- காச்சு மூச்சுனு கத்தின காதல் மனைவியோட குரல் ராஜேஷுக்குள்ள கொலைவெறிய தூண்டி இருக்கு... வீட்டுல பழம் வெட்டுறதுக்காக வெச்சிருந்த கத்திய எடுத்த ராஜேஷ் கெளரியோட தொண்டையில Just Shut up-னு குத்தி இருக்காரு.. ரத்த வெள்ளத்துல சரிஞ்ச கெளரி சம்பவ இடத்துலயே பரிதாபமா இறந்துப்போயிருக்காங்க.
- லைஃப் பார்ட்னரும் போச்சு, தன்னோட Life-ம் போச்சுனு அழுது புழம்பிய ராகேஷ் சடலத்த மறைச்சிடலாம்னு திட்டம் போட்டு இருக்காரு. அதனால பெட்ரூம்ல இருந்த பெரிய சூட்கேஸ்ல கெளரியோட உடல்ல அடக்கம் பண்ணிட்டு, அங்கிருந்த ரத்த கரைகள கழுவி க்ளின் பண்ணி இருக்காரு...
- எவிடென்ஸ்ஸ அழிச்சாலும் எப்படியும் போலீஸ்கிட்ட மாட்டிக்குவோம்னு பயந்த ராகேஷ் சூட்கேஸ்ஸ வீட்டுலயே விட்டுட்டு அங்கிருந்து தப்பிச்சு மும்பை போகுற வழியில கைதாகி இருக்காரு.
- காவல்துறையினர் மேற்கொண்ட interrogation-ல, தன்னோட காதல் மனைவி தொடர்ந்து குடும்பத்த இழிவா பேசிட்டு வந்ததாலயும், சம்பவத்தன்னைக்கு அவர் போட்ட பாட்டு தன்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணதாலயும் தான் கொலை செஞ்சிட்டேன்னு வாக்குமூலம் கொடுத்திருக்காரு. கொலையாளியோட வாக்குமூலத்த பதிவு பண்ண போலீஸ் ராகேஷ்ஷ கைது பண்ணி சிறையில அடைச்சிருக்காங்க...
Next Story
