பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கணவர் | கோரிக்கை விடுத்த மனைவி
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தனது கணவருக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டுமென, பாதிக்கப்பட்ட மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த தொழிலதிபரான 31 வயதாகும் சுபம் திவிவேதிக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்நிலையில், தனது கணவர் சுபம் திவிவேதிக்கு, தியாகி அந்தஸ்து வழங்கி கவுரவிக்குமாறு, அவரது மனைவி ஆயிஷாண்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
